Friday, June 7, 2013

ஸ்ரீமது இம்முடி சிற்றம்பல குருசுவாமிகள் திருமடம்

மடத்தின் வெளித்தோற்றம் 



மடத்தின் தற்போதைய குலகுரு: ஸ்ரீ சிதம்பர சிவாச்சாரியார் 
(பட்டாபிஷேகம் இன்னும் நடைபெறவில்லை)

முன்னைய குருக்கள்  ஸ்ரீ கனகசபாபதி சுவாமிகள் 
[சஞ்சாரம் செல்கையில் (டவாலியுடன்) வருடம்:1910 ]

சிஷ்யர்களின் குலதெய்வம் ஒன்றனுக்கு குருசாமி 
கும்பாபிஷேகம் செய்து வைக்கையில்
அருணகிரி சுள்ளிப்பாளையம் பெருங்குறிச்சி தேவேந்திரன் கூட்ட
கவுண்டச்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் குருஸ்வாமியார்
தலைமையில் நடந்தமை 
மடத்தின் முத்திரை 


குலகுருவின் மகத்துவம்

 || ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
                    நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம் ||


தெளிவு குருவின் திருமேனி காணல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே!
- திருமந்திரம்

குரு என்றால் இருளை விலக்குபவர் என்று பொருள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நமது மரபில் நமது முன்னோர் சிறந்து விளங்கினர். மாதாவால் நாம் உண்டாகிறோம், பிதாவால் குலம் வருகிறது. இங்ஙனம் வரும் குலத்தால் நமது குலகுருவும், குலதெய்வமும் கிடைக்கின்றன.
ஆயிரம் தாய்மார் இருந்தாலும் நமது தாய் வழியாகத்தானே தாயன்பை பெற்று உணர்கிறோம்! அதேபோல ஆயிரம் குருக்கள், தெய்வங்கள் இருப்பினும் நமது குலகுரு, குலதெய்வம் மூலமே நன்மை சித்திக்கும்.

தாய் தந்தையைக் காட்டுகிறாள், தந்தை குருவையும், குரு தெய்வத்தையும் காட்டுவதே நமது மரபு. தேவர்களுக்குக் குலகுரு பிருகஸ்பதி, அசுரர்களுக்கு சுக்கிராச்சாரி. இவர்கள் தத்தம் சிஷ்யர்களுக்கு நன்மை செய்யும் பொருட்டே செயல்கள் புரிந்து வந்ததனைக் காண்கிறோம். இதேபோல் அரசர்கள்தம் குலகுருக்கள் அவ்வரசர்களுக்கு நல்வழி காட்டியதனையும் ராமாயணம் போன்ற இதிகாசங்களின் வழி அறிகிறோம்.

குருவின் மகத்துவத்தினை உணர்த்த திருமூலர் தமது திருமந்திரத்தில் குருவே மனிதனுக்கு சிவம் என்கிறார்:

"குருவே சிவம் எனக் கூறினன் நந்தி
குருவே சிவம் என்பது குறித்தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உறையுணா பெற்றதோர் கோவே"

இதே கருத்தினை ஆதிமறையாகிய வேதங்களும் கூறுகின்றன :

"குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு 
குருர் தேவோ மகேச்வர: 
குருர் ஸாக்ஷாத் பரப்ரஹ்மா
தஸ்மை ஸ்ரீகுரவே நம:"


(பொருள்: குருவே பிரம்மன் அதாவது படைப்பவர், அவரே விஷ்ணு மற்றும் சிவன், அதாவது காத்து, மாற்றமும் அளிப்பவர் என்பதால் அவரே சாட்சாத் கடவுளுமாகிறார். அத்தகைய குருவினை நமஸ்கரிக்கிறேன்)

கொங்கதேசத்தில் இதனை உணர்ந்தே இத்தேசத்திற்கான பூர்வகுடிகள் 51 ஆதிசைவ ஆதீனங்களைநிறுவினர். இவ்வாதீனங்கள் குருகுலங்கள், குருமடாலயங்கள் என்று அழைக்கப்பட்டன. "அய்யம்பாளையம்", "குருக்கள்பட்டி" , "குருக்கள்பாளையம்" என்று ஊர்களையே கொங்கர் தத்தமது குருக்களுக்களித்து மகிழ்ந்தனர். கொங்கர் கொங்கதேசம் வருகையிலேயே குருக்களையும் அழைத்து வந்தனர் என கொங்கு காணிப்பட்டயம் கூறுகிறது (கொங்கு வெள்ளாளர் செப்பேடு பட்டயங்கள் (2007), கொங்கு ஆய்வு மையம், புலவர் செ. ராசு). 

குருக்களே அக்காலத்தில் திருமணங்களை நிச்சயித்து வந்துள்ளனர். இதனை மங்கலவாழ்த்தில் "வேதியன் பக்கம் விரைவுடனே சென்று"என்ற வரி மூலம் உணரலாம். கொங்கர் திருமணத்தின் ஆரம்பமே இதுதான். ஏனெனில் பிரும்மச்சாரிகள் அனைவருக்கும் குருவே பொருப்பு. இதனால்தான் "பிரும்மச்சரியங்கழித்தல்" என்ற சீரும் உள்ளது.

இதேபோல் கைகோர்வை சீரின் பொழுது குருக்கள் மறைகூறி ஆசி தந்துள்ளனர். இதனை மங்கலவாழ்த்தில் "மறையோர்கள் ஆசிகூற" என்ற வரிமூலம் உணரலாம். இவ்வாறு திருமணம் நிச்சயிக்கவும், ஆசி கூறவும் செய்த குருக்களுக்கு "மங்கிலியவரி" எனும் மாங்கல்யவரியையும் செலுத்தி வந்துள்ளனர்.

மேலும் குருவிடம் பாதபூசை செய்து, சஞ்சார காணிக்கையாக அவர்களால் முடிந்ததை மனமுவந்து அளித்து, அவர் சொற்படி தீட்சை மகாமந்திரம் உபதேசம் பெற்றுவந்துள்ளனர். ஒவ்வொரு ஆதீனத்திடமும் குறைந்தது 50 தலைக்கட்டுக்கான காணிக்கைக் கணக்கு ஓலைகள் உள்ளன. இவை சரித்திர ஆவணங்களாகும்.

இன்றும் குலகுருக்களை போற்றும் கோத்திரத்தார் நன்றாக பல்கிப்பெருகி உள்ளனர். ஏனெனில் அவர்களுக்கு நிரந்தர குருபலம் உண்டு. இவற்றை சரியாக செய்யாமல் குருவுக்குக்கொடுத்த வார்த்தை தவறியவர்களே திருமணமின்மை, துன்பங்கள், குடும்பச்சிக்கல்கள், குழப்பங்கள் போன்று துன்பங்களுக்கு ஆளாகின்றனர்.

என்னுடைய அனுபவத்தில் குலகுருக்களை மீண்டும் கண்டு ஆசிபெற்று துன்பங்களினின்று மீண்டு வாழ்பவர்கள் ஏராளம். குலகுருவால் தீராத பிரச்சனைகளே இல்லை.

"குரு பார்க்க கோடி நன்மை" என்பது பழமொழி
"குருபீடம் உயர குடி உயரும்" குரு எவ்வாறு உள்ளார் என்பதனைக் கொண்டே குடிகளின் நிலையும் இருக்கும் என்பது கண்கண்ட உண்மை.

திருமந்திரத்தில் ஆறாம் தந்திரத்தில் சிவகுரு தரிசனம் பற்றிய பதிகங்கள் மேலும் குருவின் சிறப்புகளை விவரிக்கின்றன:
http://www.tamilvu.org/slet/servlet/l4100.l41A0son?x=1549&y=1564

மேலும் குருபுஜை என்ற ஏழாம் தந்திரப் பதிகங்கள் குருவின் சிறப்புகளை கூறுகையில்:
http://www.tamilvu.org/slet/servlet/l4100.l41A0son?x=1814&y=1821
British accounts on our spiritual system (ultimately used by their and our government to destroy the system):

Account 1:

"Their Gurus are the Siva Brahmanas, or Brahmans who act as Pujaris in the temples of

Siva, and the great gods of his family. These are considered as
greatly inferior to the Smartal, either Vaidika, or Lokika. The
Guru comes annually to each village, distributes consecrated
leaves and holy water, and receives a Fanam from each person,
with as much grain as they choose to give. Some of them purchase an Upadesa
from the Guru; giving for it, according to their circumstances,
from one to ten Fanams. Those who have procured this may make
a Lingam of mud, and perform Pujas worship to this rude emblem
of the deity, by pouring flowers and water over it while they repeat
the Upadesa. Such persons must abstain entirely from animal food.
Those who have no Upadesa must pray without any set form, but
are allowed to eat the flesh of sacrifices." Pg 330.

- FRANCIS BUCHANAN, M. D, Vol. II, JOURNEY FROM மெட்ராஸ் THROUGH THE COUNTRIES OFMYSORE, CANARA, AND MALABAR, 1807 


Account 2:

"Each Nad has its Brahman Guru. The Guru of Morur and
Molasi Nads is by caste a Gurukkal, and he lives in Natta-
Kadayur , in Kangayam Nad of Coimbatore. The Gurus of
Malla-samudram and Parutti-palli Nads are also Gurukkal
Brahmans, the Guru of the former living at Ayyam-palaiyam, in
Paramati Division, his title being Immudi Sitambala Nayinar,
and the Guru of the latter Nad residing at Kallan-kulam in Salem
Taluk. The Guru of Easipuram Nad is a Dikshitar and lives at
Pasur in Erode Taluk."

- F. J. Richards, ICS, Salem, Madras district gazetteers, Vol.1, 1918

Website of Nagasamy, Director, TN Archeology dep.,
http://www.tamilartsacademy.com/journals/volume5/articles/article7.xml

Wikipedia:
http://en.wikipedia.org/wiki/Kongu_Vellalar#Honoured_Saivacharyas


Account 3

"Konganattu Brahman", a separate and distinct community in kongu region was referred in the following document (Page 6). 

Report on the various census of British India, Eyre and spottis woode printing, London , Page 6, Volume III, 1881

Account 4
The former Archeological Survey of Tamilnadu Director Thiru. Nagaswamy have referred about Kongu Shiva Brahmanars and their Gothrams in his website.

Account 5

கொங்கு மண்டலத்தில் சோழன் ஸ்ரீகாழி பிராமணர்களை குடியேற்றும் முன்பே கொங்கு நாட்டில் குருத்வமும் உடைய பிராமணர்களும், ஸ்தானிகர்களும் இருந்தததாக கார்மேக கவிஞர் கொங்கு மண்டல சதகத்தில் கூறியுள்ளார்.
  "குலசேகரன் குலோத்துங்கன் துங்கசீர்ச் சோழர்கள் கொங்கிடைமெய்த்
   தலபூசை நன்குறத் தன்னாடு உலாரிற் சமர்த்தர் கண்டு 
  நிலையான காணியும் மென்மையு மிய நிதானமுற்று
 வலவாதி சைவர்கள் வாழ்வதன்றோ கொங்கு மண்டலமே" 


அய்யம்பாளையம் ஸ்ரீமது இம்முடி சிற்றம்பல குருசுவாமிகள் திருமடத்திற்கு கட்டுப்பட்ட சிஷ்யர்களின் காணி கோத்திரங்கள்

காணிகள் - கோத்திரங்கள்:

1. கருமாபுரம்   - பொருளந்தை கோத்திரம்
2. ஏழூர்          -  பொருளந்தை கோத்திரம்
3. மாமுண்டி    - 1.பொருளந்தை கோத்திரம்
                              2.அடற கோத்திரம்
4. ஈஞ்சப்பள்ளி- பொருளந்தை கோத்திரம்
5. குமாரமங்கலம்  - தூரன் கோத்திரம்
6. பாலமேடு        - தூரன் கோத்திரம்
7. தும்பங்குறிச்சி   - தூரன் கோத்திரம்
8. அணிமூர்         - தூரன் கோத்திரம்
9. வெங்கம்பூர்      - தூரன் கோத்திரம்
10. மொடக்குறிச்சி - 1. தூரன் கோத்திரம்
                                          2. பனங்காடை கோத்திரம்
                                          3. காரி கோத்திரம்
11. ஊத்துக்குளி  - வண்ணக்கன் கோத்திரம்
12. கொளாநல்லி- 1. கண்ணன் கோத்திரம்
                                     2. கொளாயன் கோத்திரம்
13. மணலி           - செம்பன் கோத்திரம்
14. மோடமங்கலம் -  1. செம்பன் கோத்திரம்
                         2. அந்துவன் கோத்திரம்
15. ராமதேவம்       - 1. செம்பன் கோத்திரம்
                                       2. காடை கோத்திரம்
16. தோக்கவாடி     - காடை கோத்திரம்
17. தேவனாங்குறிச்சி- காடை கோத்திரம்
18. ஆனங்கூர்       - 1. பனங்காடை கோத்திரம்
                                      2. கண்ணன் கோத்திரம்
19. ஏமப்பள்ளி      - காடை கோத்திரம்
20. தோக்கவாடி     - வெண்டுவன் கோத்திரம்
21. ஏமப்பள்ளி      - காடை கோத்திரம்
22. கொளாரம்       - காடை கோத்திரம்
23. மணியனூர்       - கண்ணன் கோத்திரம்
24. மங்கலம்         - காடை கோத்திரம்
25. கொன்னையாறு    - 1. செல்லன் கோத்திரம்
                                               2. பனங்காடை கோத்திரம்
26. இருப்புலி       - செல்லன் கோத்திரம்
27. கொக்களை       - செல்லன் கோத்திரம்
28. கூத்தம்பாடி    - 1. ஆந்தை கோத்திரம்
                                     2. செம்பூத்தன் கோத்திரம்
29. கூனவேலம்பட்டி-செம்பூத்தன் கோத்திரம்
30. முருங்கம்       - ஆந்தை கோத்திரம்
31. கருதாணி        - ஆந்தை கோத்திரம்
32. பெருங்குறிச்சி  - தேவேந்திரன் கோத்திரம்
33. மொஞ்சனூர்     - தேவேந்திரன் கோத்திரம்
34. வண்டிநத்தம்   - கண்ணன் கோத்திரம்
35. இருக்கூர்       - குள்ளன்(?) கோத்திரம்
36. வீரகுட்டை     - வெண்டுவன் கோத்திரம்
37. தகடப்பாடி    - 1. கண்ணன் கோத்திரம்
                                   2. புள்ளன் கோத்திரம்
38. படைவீடு      - மேதவி கோத்திரம்
39. மரப்பறை      - செம்பூத்தன்   
40. மோரூர்         - கண்ணன் கோத்திரம் பெரியவகை நாட்டுக்கவுண்டர் மற்றும் மேற்படி கண்ணன்
41. வெண்ண்ந்தூர்  - காடை கோத்திரம்
42. மல்லசமுத்திரம்- விழியன் கோத்திரம்
43. சேலம் - நாட்டுக்கவுண்டர்கள்
44. கலியாணி ஆண்ட கவுண்டர்கள்
45. உஞ்சனை - காரி கோத்திரம்


மடத்தில் தினசரி காலை 7.30 மணியளவில் ஆத்மார்த்த பூஜை நடைபெறும். அதுசமயம் சிஷ்யர்கள் கலந்துகொள்வது மிக சிறப்பு. வருடம் ஓரிரு முறையேனும் குரு தரிசனம் செய்வது மிகவும் நல்லது.


மடத்தையும் குருஸ்வாமி அவர்களையும் குறிப்பிட்டு-மேற்கோள் காட்டி எழுதப்பட்ட வரலாற்று ஆவணங்களில் சில,

Salem, Madras District Gazetteers, Vol 1, Part 1, 1918, Pg. 145: 
"Each Nad has its Brahman Guru. The Guru of Morur and Molasi Nads is by caste a Gurukkal, and he lives in Natta-Kadayur i, in Kangayam Nad of Coimbatore. The Gurus of Malla-samudram and Parutti-palli Nads are also Gurukkal Brahmans, the Guru of the former living at Ayyam-palaiyam, in Paramati Division, his title being Immudi Sitambala Nayinar,and the Guru of the latter Nad residing at Kallan-kulam in Salem Taluk. The Guru of Rasipuram Nad is a Dikshitar and lives at Pasur in Erode Taluk."

செங்குண்ணி கோத்திரத்தார் தாமிர சாசனம்::
மோரூர், மொளசி, மோளிப்பள்ளி, வட்டூர், பெருச்சாளி நத்தம், மருதுறை, இருப்புலி, மானூர், வாழவந்தி, வெங்கரை, பாசூர், கொத்தனூர், கல்வடங்கம், காஞ்சிக்கொயில், புன்னம் ஆகிய காணிகளைச் சேர்ந்த செங்குண்ணி கோத்திரத்தார் மோளிப்பள்ளி கரியகாளியம்மன் சன்னிதியில் கலி 4794 (1696 கிறிஸ்தவ) வருடத்தில் கூத்தாடி கந்தப்பட்டன் பெண் அத்திப்பெண்ணுக்கு செங்குண்ணி கோத்திர மாணிக்கி என்று அர்பணித்தனர். அச்சாசனத்தில் சகலருடைய காணி தெய்வங்களையும் அந்துவ கோத்திரத்து ஆதிகுருவாகிய இம்முடி சிற்றம்பல நாயினாரையும் நினைத்து எழுதியுள்ளனர்.
".................இத்தியாதி தேவர்களுடைய கடாட்சத்தினாலையும் இம்முடி சிற்றம்பல சுவாமியார் பிரதாபத்தினாலையும்............................................................"

செல்ல கோத்திரத்தார் தாமிர சாசனம்:
சங்ககிரி, பருத்திப்பள்ளி, ஈரோடு, வெள்ளோடு, எளுமாத்தூர், குழவிளக்கு, இறாசம்பளி, அறச்சலூர், வாய்ப்பாடி, அஞ்சூர், ஆறுதொழு, வள்ளியறச்சல், தாராபுரம், வெஞ்சமாக்கூடல், மட்டுலகம், முட்டம், கடம்பை, குப்பம், குருமந்தூர், கோசனம், சதுமுகை, கறுகல்பாடி, திருமலைகிரி, ஆப்பக்கூடல், கொன்னையாறு, பிறசை, பாலமேடு, மொஞ்சனுர், அத்தனூர், நவனி, பட்லூர், ஆனங்கூர், இருப்புலி, கொக்களை, காவல்குறிச்சி, கச்சிவளியல், நெடுங்குளம், இடையாறு ஆகிய காணிகளைச் சேர்ந்த செல்ல கோத்திரத்தார் கொன்னையாற்று செல்லாண்டியம்மன் கோயிலில் கூடி கூத்தாடி கந்தப்பட்டன் மகள் அத்திப்பெண்ணுக்கு "தூர கோத்திர மாணிக்கி" என்ற பட்டம் அளித்தனர். நாட்டியமும், மெரமனையும் பருத்திப்பள்ளியில் நடந்தது. சாசனத்தின் முதல் சொல்லிலேயே குருவின் பெயரோடு துவங்குகிறது.
"அப்பற்ச் சித்தம்பலக் குருசுவாமியார் அருள்பெற்ற செல்ல கோத்திரத்து வெள்ஆளர் குடுத்த செப்பேட்டுச் சாஸனம். குருபாதம் துணை. சிவ ரட்சிப்பார்..........."

அந்துவ கோத்திரத்தார் தாமிர சாசனம்:
பாலமேடு, இருப்புலி, மோடமங்கலம், அந்தியூர், நாகம்பள்ளி, லக்காபுரம், அலைவாய்ப்பட்டி, கீரனூர், திருவாச்சி, ஆதியூர், தெக்கலூர் ஆகிய காணிகளைச் சேர்ந்த அந்துவ கோத்திரத்தார் தங்கள் ஆதி காணியான பாலமேட்டில் கலி 4450 (1448 கிறிஸ்தவ) வருடத்தில் கூடி அந்துவ கோத்திரத்து மாணிக்கத்தி என்று அர்பணித்தனர். அச்சாசனத்தில் சகலருடைய காணி தெய்வங்களையும் அந்துவ கோத்திரத்து ஆதிகுருவாகிய இம்முடி சிற்றம்பல நாயினாரையும் நினைத்து எழுதியுள்ளனர்.
"..................இம்முடி சிற்றம்பல குருக்கள் கிருபா கடாட்சத்திலேயும் கீழ்கரைப் பூந்துறை நாட்டிலிருக்கும் வேளாளர் கூடி தகடப்பாடியிலிருக்கும்........"

தேவேந்திர கோத்திரத்தார் தாமிர சாசனம்:
குமரமங்கலம், பொன்குறிச்சி, மொஞ்சனூர், கீரனூர், வேலம்பூண்டி, கூத்தனூர், வாங்கல் ஆகிய காணிளைச் சேர்ந்த தேவேந்திர கோத்திரத்தார் ஆதி காணியான குமரமங்கலம் பொன்காளியம்மன் கோயிலில் கலி 4885 (1784 கிறிஸ்தவ) வருடம் கூடி குமரமங்கலம் மலைபட்டன் பேத்தி முத்துவாழியை தேவேந்திர கோத்திர மாணிக்கியாக நியமிக்கின்றனர்.
"இத்தியாதி தேவதைகளுடைய கிருபையும் இம்முடி சிற்றம்பல சாமியார் கடாட்சத்துனாலேயும்............................................."

தூர கோத்திரத்தார் தாமிர சாசனம்:
குமரமங்கலம், பட்டிலூர், சிராப்பள்ளி, பாலமேடு, முடுதுறை, கலியாணி, தும்பங்குறிச்சி, கீரம்பூர், கோதையூர், இடையாறை, பெருங்குறிச்சி, காங்கயம், தூரம்பாடி, மானூர், வெங்கம்பூர், முடக்குறிச்சி, பாசூர் ஆகிய காணிகளைச் சேர்ந்த தூர கோத்திரத்தார் தங்கள் ஆதி காணியான குமரமங்கலத்தில் பொன்காளியம்மன் சன்னிதியில் கூடி தூர கோத்திரத்து மாணிக்கத்தி அர்பணித்தனர்.
"கொங்குனாட்டில் ஸ்ரீமது முள்வாய் சூழ்ந்த குன்றத்தூர் சங்ககிரி துற்கத்துக்குச் சேந்த கீழ்க்கரைப் பூந்துறைநாட்டில் பூறுவீக தெட்சிண கயிலாச அற்தநாரீசுரர் கிறுபா கடாக்ஷத்தினாலேயும் இம்முடிச் சித்தம்பல சுவாமி பாதசேகரர்......................."




மடத்தின் முகவரி


மடம் திருச்செங்கோடு அருகே அய்யம்பாளையத்தில் உள்ளது. (அருணகிரி சுள்ளிபாளையம் கவுண்டச்சியம்மன் கோவில் தாண்டி அருணகிரி அய்யம்பாளையம் உள்ளது)

முகவரி :
சிதம்பரம் குருக்கள்,
அருணகிரி அய்யம்பாளையம்,
கந்தம்பாளையம் (வழி) ,
திருச்செங்கோடு, 
நாமக்கல் (DT).
Mob: 94428 63234

சிருங்கேரி ஸ்ரீ சங்கராச்சாரியார் பாதம் போற்றி
கொங்கதேசத்திற்க்கும் பாண்டியதேசத்திற்கும்  சிருங்கேரியே சங்கராச்சாரியாராதலால் நமது மடத்தின் ஆச்சாரியாரும் அவரே:

கட்டுரை ஆசிரியர் தொலைபேசி : 91 - 424 - 2274700





4 comments:

  1. Excellent work we r proud to an goundan

    ReplyDelete
  2. இன்றைய குருகுலத்தின் நிலை என்ன தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் என்ன

    ReplyDelete
  3. இன்றைய குருகுலத்தின் நிலை என்ன தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் என்ன

    ReplyDelete
  4. வாழ்க வளமுடன் நன்றி வணக்கம்

    ReplyDelete